Emergency Relief to Flood Affected People in the East

புனர் வாழ்வும் புது வாழ்வும் (ARR) அமைப்பானது, அண்மையில் நடந்த வெள்ள அனர்த்தத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான அவசரகால உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவிகளை நாடிநின்றபோது, மலேசிய TAMIL FORUM ஒரு மில்லியன் ரூபாயை கொடையாக அன்பளித்திருந்தார்கள். மேலும் பிரித்தானியாவில் இயங்கும் CHILDREN’S HUNGER RELIEF FUND ஆனது ரூபாய் 435000 யை உடனடி தேவைகருதிய பொருள் வளங்கலுக்காக நன்கொடை செய்துள்ளார்கள். ARR தற்போது தனது நண்பர்களிடமும் குடும்பங்களிடமும் தத்தமது பங்களிப்பை நாடி நிற்கின்றது.

இந்த முயற்சியில் ARR ஏற்கனவே கல்முனை ROTARY CLUB இனது உதவியுடன் கிழக்கு மாகணத்தில் உடனடி தேவிகளுக்கான பொருட்கள் அடங்கிய பொதிகளை விநியோகித்து வருகின்றது. எமது இலங்கை ஒருங்கிணப்பாளர் HENRY AMELRAJH அவர்களும் தொண்டர்களும் முற்று முழுதாக வெள்ள பெருக்கெடுப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமான கல்முனைக்கு அண்மையில், THIRAVANTHIYAMEDU க்கு சென்று 70 குடும்பங்களுக்கு பொதிகளை வழங்கியிருந்தார்கள். மேலும் இந்த பொதிகள், கிட்டங்கி ஆற்றின் கீள்பக்கத்திலுள்ள சவளக்கடை D S DIVISION இல் மிகவும் படு மோசமாக பாதிப்புக்குள்ளான 130 குடும்பங்களுக்கும், மட்டக்களப்பிலுள்ள 300 குடும்பங்களுக்கும் சென்ற புதன்கிழமை கொடுக்கப்பட்டன. HENRY தனது தொண்டர்கள் குழுவினருடன் வெள்ளிக்கிழமை 02/01/15 திருகோணமலையில் உள்ள சம்பூர் கிராமத்துக்கு இந்த அவசரதேவை கருதிய பொருட்கள் அடங்கிய 600 பொட்டலங்களை விநியோகித்தனர்.

இங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2006ம் ஆண்டு யுத்த காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகிறார்கள். இந்த வெள்ள அனர்த்தத்தால் மீண்டும் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தற்போது குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். மேலும் சில இடங்களிலே பாதிப்படைந்த மக்களுக்கு உதவிகள் சென்றடையவே முடியாத நிலையில் கடந்த 10 தினங்களாக உணவுக்கே திண்ட்டாடும் நிலை இருப்பதாக அறிந்துள்ளோம். இந்த உடனடி தேவைகருதிய பொருட்கள் அடங்கிய ஒரு பொட்டலம் ரூபாய் 1000 மட்டுமே செலவாகிறது. உங்கள் பங்களிப்பு எத்தொகையானாலும் நாம் அதை இத்தருணம் பெறுமதி மிக்கவையாக கருதிகிறோம்.

Further to the appeal of Assist Resettlement & Renaissance (ARR) to help people affected by the recent flooding in the East, Tamil Forum (Malaysia) Berhad came forward and donated Rs 1 Million. Children’s Hunger Relief Fund, a UK based charity, also donated Rs 435,000 towards providing emergency relief supplies.  ARR is currently raising funds amongst its friends and families to contribute to this effort. ARR with the assistance of Kalmunai Rotary Club has already started distributing emergency relief items in the East. Our SL coordinator Henry Amalraj, and volunteers, visited Thiravanthiyamedu, near Kalmunai, which was isolated by the flood, and distributed emergency relief items to 70 families.  Rotary Club had to get the assistance of the navy to visit this village by boat. Emergency relief items were also provided to 130 badly affected families living downstream of Kittangi River at Chavalakkadai D.S Division, in Kalmunai and to another 300 families in Batticaloa on Wednesday. Henry is taking a team of volunteers with emergency relief items to 600 families in Sampoor, Trincomale on Friday. These families, who were displaced from their homes in 2006 due to war, have been living in temporary shelters, which have now been flooded and are accommodated in schools.  We understand that there are still areas where relief supplies never got through and that affected people have been struggling for food for the past ten days.  A parcel consisting of emergency relief items costs only Rs 1000. Any contributions would be much appreciated.

    Photo 2   Photo 16       Photo 311214 14    Photo 311214 07http://www.metromurasu.com/2014/12/130.html

https://docs.google.com/file/d/0B8OFD0lShVxDQVNXMVlYLVZ4Wk0/edit?usp=drive_web

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.